• Jul 25 2025

நடிகர்களுக்கு கொட்டிக்கொடுக்கிறாங்க..ஆனால் நடிகைகளுக்கு...கடுப்பாகிய நடிகை பிரியங்கா சோப்ரா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இப்படத்தினை அடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து பின் தொடர் வெற்றிப்படங்களால் முன்னணி நடிகையாக மாறினார்.

இதன்பின் முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடியாக நடித்து ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்தார். மேலும் அப்படி இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக டாப் 10 இடத்தில் தற்போது  இருந்து வருகிறார்.

எனினும் சமீபத்தில் பெண்களுக்காக குரல் கொடுத்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பதாகவும் அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் தான் நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அத்தோடு சம்பள விசயத்தில் கூட ஆண் பெண் பாகுபாடு இருப்பதாகவும் நாங்கள் நடிகர்களுக்கு இணையாக சம்பளமும் கேட்கிறோம் என்று கூறியுள்ளாார். மேலும் ஆண் நடிகர்கள் ஷூட்டிங்கிற்கு எப்போது வருகிறார்கள் அதுவரை நாங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆனால் நடிகர்களோ அவர்களுக்கான நேரத்தில் வந்து விட்டு சென்றுவிடுவார்கள். அத்தோடு எப்போது ஷூட்டிங்கிற்கு வரவேண்டும் என்பதும் அவர்களின் முடிவாகத்தான் இருக்கும் என்று சரமாறியாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.


Advertisement

Advertisement