• Jul 24 2025

புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகர்... 2கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மகன்... உதவிக் கரம் நீட்டுமா நடிகர் சங்கம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக இருந்தவர் சோமு. இவரை மகன் தான் நடிகர் சண்முகராஜன். இவர் 'சாவி, ஊமை விழிகள், ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அத்தோடு ஒரு சில படங்களில் துணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கின்றார்.


10 ஆண்டுகளாக வாடகை குடியிருப்பில் வாழ்ந்து வரும் இவருக்கு நகினா ராஜ் என்ற மனைவியும் மஸ்தான் என்ற மகனும் உள்ளனர். இவர்களின் குடும்பம் தற்போது வறுமைக்கு உட்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் சண்முகராஜன் உடல்நலையால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருப்பதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இவருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இவரின் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். சண்முகராஜன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக முன்னர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மறுபுறம் சண்முகராஜனின் மகன் மஸ்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சாலை விபத்தில் சிக்கி தன்னுடைய இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறார். இவ்வாறாக வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள இந்தக் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின், நடிகர் சங்கமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று நகினா உதவிக்கரம் நீட்டி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

Advertisement

Advertisement