• Jul 24 2025

நடிகை அபிராமி - கவுதம் மேனனின் காஷ்மீரில் இருந்து ஜில் போட்டோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 காஷ்மீரில் ‘லியோ’ படத்திற்கான புதிய படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, கொட்டும் பனி  இருந்தபோதும் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 

இப்போது, தயாரிப்பாளர்கள் காஷ்மீரில் பூஜ்ஜிய டிகிரியில் பிரமாண்டமான செட் ஒன்றை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வப்போது, படக்குழுவில் இருந்து புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இப்பொது இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் அபிராமி வெங்கடாசலம் சமீபத்திய ஸ்டில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காஷ்மீர் அட்டவணைசெட்யூல் அடுத்த மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலர் நடிக்கும் ‘லியோ’ படத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மிகப் பெரிய அளவில் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையில், ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது.

லியோவில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பிக் பாஸ் அபிராமி , ஜனனி மற்றும் பல நட்சத்திரங்கள்  நடிக்கின்றனர்.


Advertisement

Advertisement