• Jul 24 2025

இந்த ஒரு காரணத்தினாலேயே எனக்கு படவாய்ப்புக் கிடைக்கல- ஓபனாகப் பேசிய நடிகை அபிராமி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை அபிராமி மிடில் க்ளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், சமஸ்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.. இதில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்திருந்தது, அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இவரது பூர்வீகம் கேரளா மாநிலமாக இருந்தாலும், விருமாண்டி படத்தில் மதுரை தமிழை, சரியான உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்களுடன் பேசி பலரின் பாராட்டுக்களை பெற்றார்.


இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அபிராமி, என்னுடன் நடித்த பலர் என்னை விட உயரமானவர்கள். எனக்கு என்னுடைய உயரம் எப்போதும் பிரச்சினையாக இருந்ததில்லை ஆனால் அந்தப் பொண்ணு ரொம்ப உயராமாக இருக்கிறாங்க என்று சொல்லி ஒதுக்கிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது என்று அபிராமி கூறியுள்ளார். 

மேலும் தற்பொழுது படவாய்ப்பினைப் பெற்று நடித்து வருவதோடு ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சயில் நடுவராகவும் இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement