• Jul 25 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இயக்கும் இங்கிலாந்து இயக்குநர்.. என்ன கதை தெரியுமா.?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நயன்தாராவுக்கு திருமணத்துக்கு பின்பு பட வாய்ப்புகள் மிக பெரிய அளவில் குறைந்தது. திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க திட்டமிட்டிருந்த நயன்தாரா நடிப்பில் திருமணத்திற்கு பின்பு வெளியான படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இதனால் ஏற்கனவே காமிட்டான படங்களில் இருந்தும் வெளியேறி வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில் நயன்தாரா இடம் எனக்கு தான், நான் தான் அடுத்த நயன்தாரா என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி வருகிறார். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா மொத்தம் ஆறு லட்சம் தான் தமிழ்நாட்டின் ஷேர் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது.

அதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான த கிரேட் கிச்சன் என்கின்ற படம் தமிழ்நாட்டு ஷேர் வெறும் ஒன்பது லட்சம் தான் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் அந்த படத்திற்கு செலவு செய்த போஸ்டர் பணம் கூட தயாரிப்பாளருக்கு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய ஒரு கேவலமான தோல்வியை சந்தித்து இருந்தது,

இருந்தாலும் தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் இங்கிலாந்தில் ஷார்ட் பிலிம் எடுத்து வந்த ஒரு இயக்குனர், தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழ் சினிமாவுக்கு இணயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார். இந்த படம் ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகையாகவே நடிக்கிறார், ஒரு சினிமா நடிகையின் கதையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட வருகிறது. 

இந்த நிலையில் தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்ட்டில் அதிக படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட்டாகி வரும் நிலையில், கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் படுதோல்வியை சந்தித்தாலும்.தற்பொழுது இங்கிலாந்து இயக்குநர் படத்தில் கமிட்டாகி உள்ள ட்ரெங்டிங் துர்கா என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை தரும் என்கின்ற நம்பிக்கையில் ஐஸ்வர் ராஜேஷ் உறுதியாக இருப்பதாகவும். மேலும் நயன்தாரா விட்டுச்சென்ற இடத்தை பிடிப்பதில் உறுதியாக இருப்பதால், எத்தனை தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்டில் அடுத்தடுத்து நடித்து வரும் ஐஸ்வர் ராஜேஷ் நிச்சயம் வெற்றி அடைந்து நயன்தாரா போன்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தே தீருவேன் என்பதில் மிகத் தீவிரமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement