• Jul 25 2025

குழந்தை பெற்ற பின்பு 3 மாதத்தில் உடல் எடையை குறைத்த நடிகை ஆலியா பட் - எப்படி தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ஆலியா பட்.பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்து இவர் மிகச்சிறிய வருடங்களிலேயே சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரனபீர் கபூரை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராஹா என்ற மகள் உள்ளார்.

குழந்தை பெற்றெடுத்த பிறகு குண்டான இவர் மிக விரைவிலேயே உடல் எடையை குறைத்துவிட்டார். பிரசவத்தின் போதே ஆலியா யோகா, வொர்க்கவுட் என பயங்கர ஃபிட்னஸில் கவனம் செலுத்தினார்.

வீட்டிலேயே வாக்கிங், காலை நேரத்தில் யோகா, எல்தி கஞ்சி என உணவு முறையை மாற்றினாராம்.

பீட்ரூட் சாலட் மிகவும் முக்கியமானதாம். வெயிட் லாஸுக்கு காலை நேரத்தில் பீட்ரூட் சாலட் பெரிதும் உதவியதாக இருந்தது என ஆலியா பட் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement