• Sep 10 2025

இப்போ தான் முதல் குழந்தை பிறந்திருக்கின்றது அதை பற்றி இன்னும் யோசிக்கல- பளிச்சென்று பதில் சொன்ன நடிகை ஆல்யா பட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவட் சினிமாவில் தவிர்க்க முடியா நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆல்யா பட். இவர் சில ஆண்டுகளாக நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்த கொண்டனர். இவர்களின் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

மேலும் இவர்களுக்கு கடந்த நவம்பர் 6ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ரன்பீர் கபூர்  குடும்ப வழக்கப்படி 'R' என தொடங்கும் எழுத்தில் பெயர் வைக்க விரும்பி 'ராஹா' என அக்குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளனர். இதனிடையே ஆலியா பட், குழந்தை ராஹா பிறந்த பிறகு தனது வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்து  நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.  


இது தொடர்பாக பேசிய ஆலியா பட், ``குழந்தை பிறந்த பிறகு எங்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தாய்மை உணர்வு என்னை மாற்றிவிட்டது. குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. நான் எப்படி என்னுடைய படக் கதாபத்திரங்களைத் தேர்வு செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. இன்னும் நான் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. 

ஆனால் நான் எல்லாவற்றையும் எதிர்நோக்கும் விதம் மாறிவிட்டது. முன்பைவிட நான் இப்போது மனம் திறந்துள்ளேன். இது என்னுடைய திரை வாழ்கையில் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் எனது பயணம் எப்படி செல்ல போகிறது என்பதைக் காண  உற்சாகத்தோடு காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Advertisement