• Jul 26 2025

திடீரென சர்ஜரி செய்து கொள்ளப்போகும் நடிகை ஆல்யா மானசா- ஆபரேஷன் தியேட்டர் செல்லும் முன் அவரே போட்ட பதிவு-

stella / 2 years ago

Advertisement

Listen News!


வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகளைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு என்றும் தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியலில் செம்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் ஆல்யா மானசா.

இவர் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துள்ளதோடு இவர்களுக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றனர். இதனை அடுத்து இருவரும் சீரியலில் பிஸியாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகும் அனியா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.


பொதுவாக சீரியல் நடிகைகளும் எப்போதும் மக்களுடன் ஆக்டீவாக இருக்க வேண்டும் என இன்ஸ்டாவில் தங்களது சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை ரசிகர்களுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்.

அப்படி எங்கே சென்றாலும், குழந்தைகளுக்கு என்ன வாங்கினாலும், என்ன பரிசு வந்தாலும் அதை அப்படியே வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் இருப்பவர்கள் சீரியல் பிரபலங்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா தான்.

துபாயில் புதிய வருடத்தை கோலாகலமாக கொண்டாடிய ஆல்யாவிற்கு காலில் அடிபட்டுள்ளது. இதனால் காலில் கட்டுகட்டி வீல் சேரில் படப்பிடிப்பிற்கு எல்லாம் சென்றார். 

தற்போது  ஆல்யாவிற்கு சர்ஜரி நடக்கப்போகிறதாம். அதற்கு முன் தனது கணவர் சஞ்சீவுடன் ஒரு புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டு, சர்ஜரி நடக்கப்போகிறது, எனக்கு பயமாக இருக்கிறது.ஆனால் எனது கணவர் என்னுடன் இருக்கிறார், கடவுள் கொடுத்த பரிசு அவர் என கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement