• Jul 25 2025

வில்லன் நடிகருக்கு மறுப்புத் தெரிவித்து விட்டு... விவாகரத்து நடிகரை மணந்த நடிகை அமலா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1986ஆம் ஆண்டு வெளியான 'மைதிலி என்னை காதலி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா. இவர் சினிமாவிற்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். 


இந்நிலையில் அமலாவின் திரைப்பயணத்தின் போது இடம்பெற்ற ஒரு சுவாரஷ்யமான சம்பவமானது வெளியாகி இருக்கின்றது. அதாவது 1987-ஆம் ஆண்டு அமலா மற்றும் ரகுவரன் நடிப்பில் உருவான 'கூட்டுப் புழுக்கள்' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.


இப்படத்தின் படத்தின் உடைய படப்பிடிப்பின் போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலை அமலாவிடம் நேரடியாக கூறியுள்ளார் ரகுவரன். ஆனால் இந்த காதலுக்கு அமலா முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இதனைத் தொடர்ந்து ரகுவரன் மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறப்படுகின்றது.


இதன் பின்னர் கடைசியில் அமலா 1992 -ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்திருக்கின்றார்.


மேலும் நாகார்ஜுனா அமலாவிற்கு முன்பு லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து கொண்டனர். இதன் பின்பு தான் அமலாவை மணந்து கொண்டார்.

Advertisement

Advertisement