• Jul 26 2025

செய்தியாளர்கள் முன் கதறி அழுத நடிகை தர்ஷா குப்தா..நடந்தது இது தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகை தர்ஷா குப்தா செய்தியாளர் கேட்ட கேள்வியால் கதறி கதறி அழுதுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்  செல்லத்தை யாருடா அழவைத்தது என் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மாடல் அழகியான தர்ஷா குப்தா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் அறிமுகமானார்.மேலும் இந்த தொடரில் குடும்பத்தை காப்பாற்ற போராடும், தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த சீரியலில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார். அதன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திடீரென பிரபலமானார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகை தர்ஷா குப்தா சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை ஹோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஓ மை ஹோஸ்ட் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட தர்ஷா குப்தாவிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டனர். அப்போது, சதீஷ் உடனான பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலளித்த தர்ஷா குப்தா. மேலும் அந்த சம்பவத்திற்கு பின்னர்  சதீஷ் என்னிடம் போனில் பேசினார். இப்போ எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

அத்தோடு  கிறிஸ்துமஸ் பாண்டிகைக்கு வாழ்த்து கூறி கவர்ச்சி போட்டோ போட்டு இருக்கீங்க, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கவர்ச்சியா போட்டோ போடலாமா என ஒரு செய்தியாளர் கேட்க. அது ஒரு போட்டோஷூட் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக எடுத்தேன் அவ்வளவு தான் எனக்கு அதில் கவர்ச்சி தெரியவில்லை என்றார்.

அதன் பின்னர்  ஒரு நிருபர், உங்களுக்கு சினிமாவில் முதிர்ச்சி இல்லை என்றும் அனைவர் இடத்தில் அடிக்கடி நீங்கள் கோவப்படுவதாக கூறப்படுகிறது  ஏன் அப்படி கோவப்படுகிறீர்கள் என்று கேட்டார். அப்படியா நான் யாரிடத்திலும் அப்படி கோவப்பட்டது இல்லை நீங்கள் சொல்லித்தான் அப்படி ஒரு விஷயம் இருப்பதே எனக்கு தெரிகிறது தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, நேற்று ஏடாகூடமாக கேள்வி கேட்ட செய்தியாளரை எதர்ச்சையாக சந்தித்த தர்ஷா குப்தா, நான் என்ன அப்படி பண்ணிட்டேன் ஏன் கோவப்பட்டான், திமிரா நடந்துக்கிறேன் என்றேல்லாம் கேள்வி கேட்குறீங்க என்றார். என் கூட பழகுறவங்களுக்கு என்ன பத்தி நல்ல தெரியும். நான் இன்னசென்ட், எல்லாருக்கும் நான் மரியாதை கொடுப்பேன். நான் என்ன பண்ணிவிட்டேன் என்று என்னைப்பார்த்து இப்படி கேள்வி கேட்குறீங்க, தப்பா பேசுறீங்க என்று கண்ணீர் விட்டு கதறி கதறி அழுதார். இதையடுத்து, அவரை செய்தியாளர்கள் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். மேலும் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் யாருடா  என் செல்லத்தை அழவைத்தது என்று கேட்டு அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement