• Jul 25 2025

அச்சு அசல் சகுந்தல பட சமந்தாவைப் போல் மாறிய நடிகை தர்ஷா குப்தா...! லைக்ஸுகளை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்....!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் ஆன திரைப்படம் சாகுந்தலம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகை சமந்தா சாகுந்தலையாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருந்தார்.

குணசேகரன் இயக்கியிருந்த இப்படத்தை நீலிமா குணா தயாரித்து இருந்தார். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் மந்தமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கியதோடு பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வியை சந்தித்தது. இப்படம் வெறும் ரூ.6 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.

சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தாலும், அப்படத்திற்காக சமந்தா போட்ட கெட் அப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதனால் அவரைப்போலவே உடை அணிந்து ஏராளமானோர் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடிகை தர்ஷா குப்தா, சமந்தாவின் சாகுந்தலம் கெட்-அப்பில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் தர்ஷா குப்தாவை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருவதோடு அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement