• Jul 24 2025

ஹீரோக்களுக்கே டப் கொடுக்கிறாரே நடிகை திஷா பாட்னி...எப்படியெல்லாம் பறந்து சண்டை போடுகிறார் பாருங்க..மிரட்டல் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. இவர் முதல் முறையாக கங்குவா படத்தின் மூலமாக தான் தமிழில் அறிமுகமாகிறார்.

சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்து மாதம் டீசர் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.நடிகை திஷா பாட்னி பாலிவுட்டில் வெளிவந்த சில திரைப்படங்களில் ஆக்ஷன் நாயகியாக கூட நடித்துள்ளார். அவ்வப்போது ஸ்டண்ட் செய்யும் வீடியோகளை கூட தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்வார்.

இந்நிலையில், தற்போது நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு ஸ்டண்ட் செய்து அசத்திய வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சூர்யா 42 படத்திற்காக தான் இப்படி தயாராகிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement