• Jul 24 2025

நடிகை கௌதமிக்கு கிடைத்த மிகப்பெரிய விருது- வாழ்த்தும் ரசிகர்கள்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

கௌதமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.


இவர் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சேஷகிரி ராவ் - வசுந்தரா தேவி இணையரின் மகளாக 2 ஜூலை 1965ஆம் நாள் பிறந்தார்.

மேலும் இவர் தொகுப்பாளராக மனிதிவா என்ற சிறப்பான ஒரு நிகழ்ச்சியை சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் செய்து வருகிறார்.


இந்நிலையில் Asia Metropolitan University Malaysia பல்கலைக்கழகம் நடிகை கௌதமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர். அந்த தகவல் வெளியாக ரசிகர்கள் நடிகை கௌதமிக்கு தனது வாழ்த்தை கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement