• Jul 26 2025

‘காந்தாரி’படப்பிடிப்பு முடிந்து காளிகாம்பாள் கோவிலுக்கு சென்ற நடிகை ஹன்சிகா! தரிசித்த புகைப்படங்கள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் நடிகை ஹன்சிகா மோத்வானியம் ஒருவர்.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமீ இருக்கு என்று சொல்லலாம்.

 கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோ கூட சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

நடிகை ஹன்சிகா தற்போது ‘காந்தாரி’ எனும் திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை  ஆர் கண்ணன் இயக்குகிறார்.

இந்நிலையில், ‘காந்தாரி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நேற்று ஹன்சிகா இயக்குநருடன் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

அவர் கோயிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

காந்தாரி படத்தில், நடிகை ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது, இந்த படத்தில் அவர் பழங்குடியின பெண் மற்றும் அரசு அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹன்சிகாவிடம் கார்டியன், ரவுடி பேபி, 105 நிமிடங்கள் மற்றும் ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ உள்ளிட்ட படங்கள் கையிருப்பில் உள்ளது. அவர் கடைசியாக மஹா படத்தில் நடித்தார். எனப்து குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement