• Jul 24 2025

மாப்பிள்ளையிடம் ஒரு நிமிஷத்துக்கு 5 லட்சம் கேட்ட நடிகை ஹன்சிகாவின் தயார்..! வெளியான பரபரப்பு சம்பவம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ஹன்சிகா. தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகாவின் 50-வது படமான மஹா சமீபத்தில் வெளியானது.

நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியாவை டிசம்பர் 4, 2022 அன்று திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்நிலையில் ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முடிவுகள் என தொடங்கி பல ரகசியங்கள் குறித்து பேசினர்.

ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் சமீபத்திய எபிசோடில், ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி, மணமகன் சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் நிமிடத்திற்கு ரூ. 5 லட்சம் கேட்டதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹன்சிகா தாயார் மோனா மோத்வானி, சோஹேலின் அம்மாவை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்தேன். அது என்னவென்றால், இன்று நீங்கள் தாமதமாக வந்தால், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement