• Jul 24 2025

ஹன்சிகாவுக்கு , கல்யாணத்துக்கு முன்னாடி கணவர் வீடியோ காலில் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா  மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி  ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் மிகப்பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். 

ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். மேலும், இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகியது.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஹன்சிகா - சோஹேல் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்த வெப் சீரிஸ், பிரபல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு எபிசோடுகளாக இவை வெளியாகி வரும் சூழலில், சமீபத்தில் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது.

அதன்படி திருமணத்திற்கு முன்னால் ஹன்சிகாவின் கணவர் சோஹைல், தனது மனைவிக்காக அசத்தலான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். ஹன்சிகா பெயரை தனது கையில் பச்சை குத்தவும் செய்து,மேலும் டாட்டூ குத்தியபடி ஹன்சிகாவிற்கு வீடியோ காலும் செய்து இருந்தார்.

இதனைக் கண்டதும் மனம் உருகி போகும் ஹன்சிகா, இன்ஜெக்ஷன் கூட நான் எடுத்துக் கொள்ள பயப்படுவேன். ஆனால், எனக்காக டாட்டூ குத்திக் கொண்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.



Advertisement

Advertisement