• Jul 25 2025

வெண்ணிற கவுணில் ஓவர் கவர்ச்சி காட்டிய நடிகை ஜான்வி கபூர்- இப்படி கொள்ளை அழகில் ஜொலிக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானவர் தான் ஜான்வி கபூர்,இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மகள் ஆவார்.

இதனைத் தொடர்ந்து, சில படங்கள் நடித்து வந்த ஜான்வி கபூர், தமிழில் நயன்தாரா நடிப்பில், வெளியான கோலமாவு கோகிலா" படத்தின் ஹிந்தி ரீமேக்கில், முதன்மை கதாபாத்திரத்திலும் தற்போது நடித்துள்ளார்.

"குட் லக் ஜெர்ரி" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது, இதற்காக நடிகை ஜான்வி கபூர் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோக்களில் பல நிறங்கள் உள்ள வெண்ணிற உடையில் ஜான்வி கபூர் தோன்றியுள்ளார். கவர்ச்சியாக இருக்கும் இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி என்ற படத்தில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்காக தினேஷ் கார்த்திக்கிடம் ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement