• Jul 24 2025

நடிகை ஜெயலலிதா இந்தவொரு விஷயம் பண்ணாமல் ஷுட்டிங்கிற்கே வரமாட்டாராம்- இதுவரை யாரும் அறிந்திடாத ரகசிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னடம்,தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஜெயலலிதா 1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.பின்னர் இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டது. வெண்ணிற ஆடை படத்தின் அத்தனை பாடல்களும் அன்றைய காலத்தில் ஹிட் ஆனது.

இதனை அடுத்து ஜெயலலிதா, சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபல்யமானார்.இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த காசி ஜெயலலிதாவை பற்றி சில விஷயங்களை ஒரு பேட்டியின் போது கூறியிருக்கிறார்.அந்த வகையில் அவர் கூறியிருப்பதாவது,


 அதாவது ஜெயலலிதா மற்றும் அவரது தாய் சந்தியாவுக்கு ஆடைகளை தைத்துக் கொடுப்பாராம் காசி.இவரை பார்த்தாலே ஜெயலலிதாவுக்கு சிரிப்புத்தான் வருமாம். அந்தளவுக்கு கிராமத்தில் இருந்து வந்த காசி வெளி உலக நடப்புகளை பற்றி தெரியாமல் வெள்ளந்தியாக பழகுவது ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடிக்குமாம்.

எப்போதுமே ஜெயலலிதா செண்ட் அடிக்காமல் வரமாட்டாராம். அதுவும் மேல் இருந்து கால் வரை முழுவதும் செண்ட் அடித்துவிட்டுதான் வருவாராம். அதுமட்டுமில்லாமல் மேக்கப் போடும் போதும் சரி ஆடைகளை அணியும் போதும் சரி ஜான்சன் அன் ஜான்சன் பவுடர்தான் போடுவாராம்.


அதனால் படப்பிடிப்பிற்கு பெரிய ஜான்சன் பவுடர் டப்பாவை தூக்கிக் கொண்டுதான் போகனுமாம். ஒரு வேளை அந்தப் பவுடரை மறந்து விட்டு வந்தால் கையில் கிடைக்கிறத தூக்கி எறிவாராம் ஜெயலலிதா. வேறொரு பவுடரை கொடுத்தாலும் போட்டுக் கொள்ள மாட்டாராம் என்றும் அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement