• Jul 26 2025

முதன் முதலாக சீரியலில் களமிறங்கியுள்ள நடிகை கௌசல்யா- அடடே இது சூப்பர் ஹிட் சீரியலாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் கௌசல்யா. இவர் இதனைத் தொடர்ந்து நேருக்கு நேர், ப்ரியமுடன் ,சொல்லாமலே, பூவேலி, உன்னுடன் எனப் பல படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் தற்பொழுது ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.


அதாவது கதாநாயகியாக அல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். அதன்படி இசையமைப்பார் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கௌசல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. மேலும் சமீபகாலமாக வெள்ளித்திரை நாயகிகள் சின்னத்திரையில் நடித்து வருவது அதிகரித்துச் செல்வதையும் காணலாம்.

Advertisement

Advertisement