• Jul 24 2025

வடிவேலு டயலாக் பேசி அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷ். என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி ஷெட்டி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் சிறப்பான படங்களை மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் இவரை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழில் இவரது நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் ரிலீசாகவுள்ளது. உதயநிதி, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

உதயநிதி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் அவருக்கு சினிமாவில் கடைசிப்படம் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு, வழக்கமான தன்னுடைய காமெடியை விட்டு களமிறங்கி கேரக்டர் ரோலில் கலக்கியுள்ளார். உதயநிதி மற்றும் வடிவேலுவின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி அதிரடியாக அமைந்துள்ளது.

இந்தப் படம் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தற்போது தொடர்ந்து ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷும் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்..

இந்நிலையில் சிறிது காலங்கள் கழித்தே தனக்கு கமர்ஷியல் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே மாமன்னன் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த உதயநிதி மற்றும் வடிவேலு குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் வடிவேலுவை இமிடேட் செய்யும் வகையில், அவரது ஆவ்வ்வ் என்ற செய்கையும் கீர்த்தி சுரேஷ் செய்து காட்டினார். தொடர்ந்து தனக்கு வடிவேலுவின் அட போப்பா என்ற காமெடி டயலாக்தான் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இவர் இவ்வாறு கூறிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement