• Jul 25 2025

கல்யாணத்துக்குப் பிறகும் பிரபல நடிகரோடு லிப் லாக் அடித்த நடிகை கியாரா அத்வானி - வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறிய கியாரா அத்வானி தெலுங்கு மொழியிலும் மகேஷ் பாபு, ராம்சரண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் சில படங்களில் நடித்து வந்த கியாரா அத்வானி அவர் மீது காதல் கொண்ட நிலையில், இருவரும் சமீபத்தில் பிரம்மாண்டமாக தங்கள் திருமணத்தை செய்துக் கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகும் பழையபடியே பிசியான பாலிவுட் நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இயக்குநர் சமீர் வித்வான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யான் உடன் கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள சத்ய பிரேம் கி கதா படத்தின் பாடலான நசீப் சே பாடல் இன்று வெளியானது.

லடாக் பகுதியின் பனிப்பொழிவை அழகாக காட்சிப்படுத்தப்பட்ட அந்த பாடலின் நடுவே சூடான நூடுல்ஸை கார்த்திக் ஆர்யானும் கியாரா அத்வானியும் வாயோடு வாய் வைத்து உறிஞ்சி சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதன் க்ளிப்ஸ் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.சித்தார்த் மல்கோத்ரா இந்த பாடலை பார்த்தால் என்ன நினைப்பார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 


மேலும், பாடலின் இறுதியில் கார்த்திக் ஆர்யான் கியாரா அத்வானிக்கு செம ஹாட்டாக கொடுக்கும் லிப் லாக் காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன.படத்தின் பப்ளிசிட்டிக்கு இந்த ஒரு பாடலே போதும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு அந்த பாடலை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement