• Jul 23 2025

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கூலாக நடிகை லைலா வைத்த கோரிக்கை- செம பஃன்னி கேர்ள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

எகிரே பவுரமா என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் லைலா.இவர் இதனைத் தொடர்ந்து தமிழில் கல்லழகர் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன் பிதாமகன், தீனா, உன்னை நினைத்து ,மௌனம் பேசியதே, காமராசு எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.மேலும் சில ஆண்டுக்கு முதல் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.


இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளியின் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்து வதந்தி என்னும் வெப் சீரியலிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது நான் நெக்கட்டிவ் ரோல்களில் நடிக்கத் தான் ஆசைப்படுகின்றேன். கண்டிப்பாக அப்படிப் படங்களைத் தான் தேர்வு செய்து நடித்து வருகின்றேன் என்று கூறினார்.


மேலும் சர்தார் படத்தைத் தொடர்ந்து என்னை வச்சு நிறைய மீம்ஸ் கிரியேட் பண்ணிட்டு வருகிறாங்க.அதை பார்க்க நல்லா இருக்கு. என்னை வச்சு வருகிற மீம்ஸ் எல்லாம் படிப்பேன் அதெல்லாம் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு. என்னை வச்சு மீம்ஸ் கிரியேட் பண்ணுங்க என கூலாக பதில் கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி வைரலாகி வருவதையும் காணலாம். 

Advertisement

Advertisement