• Jul 23 2025

நடக்க முடியாமல் அவஸ்தைப்படும் நடிகை லட்சுமி ராய்-ஏர்போட்டில் நடந்த சம்பவம்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நுழைந்தவர் லட்சுமி ராய். இவர் பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால், 15 வருடங்களுக்கும் மேல் நடித்தும் அவரால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளர்.லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என்கிற மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.


ஹிந்தியில் தூக்கலான கவர்ச்சி காட்டி அவர் நடித்த ஜூலி 2 படமும் வெற்றிபெறவில்லை. எனவே, அவரின் பாலிவுட் ஆசையும் மண்ணை கவ்வியது.காஞ்சனா, அரண்மனை, தாம் தூம், மங்காத்தா போன்ற சில படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. தமிழில் அதிக பேய் படங்களில் நடித்த நடிகை இவராகத்தான் இருப்பார்.

தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக மாறிவிட்டார். லெஜெண்ட் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.சமீப காலமாக கிளாமரை அதிகரித்து இருக்கும் அவர் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு வரும் பிகினி ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.


தற்போது ராய் லட்சுமி அடிபட்டு ஏர்போர்ட்டுக்கு நடக்க முடியாமல் வந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement