• Jul 25 2025

நயன்தாராவின் மேக்கப்பை கலாய்த்த நடிகை மாளவிகா மோகனன்..கொந்தளித்த ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் அடித்தது.

இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது.எனினும் இதை தொடர்ந்து கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவை, பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டியொன்றில் கலாய்த்து பேசியுள்ளார்.

மேலும் ஒரு திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிகை ஒருவர் உயிர் போகும் நேரத்தில் மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டுகொண்டு நடித்திருந்தார்.அத்தோடு கமெர்ஷியல் படமாகவே இருந்தாலும் அது எப்படி நடக்குமென்று நடிகை மாளவிகா மோகனன்  தெரிவித்து இருந்தார்.

இதை கவனித்த ரசிகர்கள் ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த காட்சியை தான் மாளவிகா கலாய்த்துள்ளார் என்று கூறி வருகிறார்கள். இன்னும் சில நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி மாளவிகா மோகனனை திட்டி வருகிறார்கள்.








Advertisement

Advertisement