• Jul 25 2025

நடிகை மீனாவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிகர் சிவாஜியின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே.

மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இதனால் இவருக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த எஜமான், நாட்டாமை, முத்து, ஔவைசண்முகி, பாரதிகண்ணம்மா, ரிதம், திரிஷ்யம் போன்ற படங்கள் பல விருதுகளைப் பெற்றதும் தெரிந்ததே. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். தற்பொழுது மோகன்லால் நடிப்பில் வெளிவந்த திரிஷ்யம் 2 படங்களில் நடித்திருந்தார்.

நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில், நடிகை மீனாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 35 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement