• Jul 24 2025

மன்னர் சார்லஸை சந்தித்துப் பேசவுள்ள நடிகை மேகன் , வெளிவந்த ரகசியம்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பிரித்தானியாவின் மன்னரான சார்லஸிடம் தனியாக சந்தித்துப் பேச அனுமதி கோரியுள்ளார் மேகன் மெர்க்கல் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் கலிபோர்னியா திரும்பும் முன்னர் மனக்கசப்புகளை பேசி முடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. மேகனின் இந்த முடிவை பல தரப்பினரும் ஆதரித்துள்ளதுடன், மிகவும் துணிச்சலான நடவடிக்கை எனவும் பாராட்டியுள்ளனர்.மன்னரிடம் உரிய அனுமதி கோரி மேகன் மெர்க்கல் முறைப்படி கடிதம் அளித்துள்ளதாகவே அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


தங்களது இரு பிள்ளைகளையும் அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்த ஹரி- மேகன் தம்பதி, உடனடியாக கலிபோர்னியா திரும்பும் என்றே நம்பப்படுகிறது.அதற்கு முன்னர் குடும்பத்தில் நிலவும் இறுக்கமான சூழலை போக்கிவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஹரி- மேகன் தம்பதி தற்போது விண்ட்சர் அரண்மனையில் தங்கியிருப்பதாகவே நம்பப்படுகிறது.இதனையடுத்தே, மன்னர் சார்லஸுடன் இருவரும் தனித்தனியாக சந்திக்கும் வாய்ப்பை மேகன் மெர்க்கல் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மன்னர் தரப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை. 

Advertisement

Advertisement