• Jul 26 2025

மாரடைப்பால் உயிரிழந்த கணவர்... பள்ளி செல்லும் மகன்... நெகிழ்ச்சியோடு நடிகை மேக்னா ராஜ் இட்ட பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல கன்னட நடிகர் ஆகியன சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை மேக்னா ராஜ் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென அவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.


அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜ் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் தற்போது அவரின் மகன் ராயன் ராஜ் வளர்ந்து பள்ளி செல்லும் வயதை எட்டி உள்ளார்.


இதனைத் தொடர்ந்து தனது மகன் முதல் முறையாக பள்ளி செல்ல உள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார் மேக்னா ராஜ். இப்பதிவில் அவர் குறிப்பிடுகையில் "நாம் பெற்றோர் ஆகிவிட்டால் குழந்தைகள் மட்டுமல்லாது, அந்தக் குழந்தைகளை பெற்றவராகவும் நாம் பல மைல்களை கடக்கிறோம். 


இன்று அத்தகைய ஒரு சிறப்பான மறக்க முடியாத ஒரு நாளாகும். என் மகன் ராயன் பள்ளிக்கு செல்லும் முதல் நாள். நான் கடந்து வந்த கஷ்டங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கல்வி, அறிவு போன்ற முக்கிய வாழ்க்கை பாடங்களை நோக்கி எனது மகனின் முதல் படி இன்று ஆரம்பிக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிகளும் வாழ்த்துக்களும் வேண்டும்" என்று மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவு செய்துள்ளார் மேக்னா ராஜ். 


பள்ளி செல்லவுள்ள இவரின் மகனிற்கு சமூக வலைத்தளங்களின் வாயிலாக பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement