• Jul 25 2025

பாலுமகேந்திரா இறப்பதற்கு முன்னர் கூறிய விடயம்... நிராகரித்த நடிகை மௌனிகா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை மௌனிகா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் என்ற சீரியலில் அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் இவர் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இயக்குநர் பாலுமகேந்திராவோடு தான் நடித்த அனுபவங்கள், அவருடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் ஓப்பனாக தெரிவித்து இருக்கின்றார். அதாவது தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவர்தான் பாலு மகேந்திரா.


அந்தவகையில் பாலு மகேந்திரா இரண்டு திருமணத்திற்கு பிறகு தான் மௌனிகாவை திருமணம் செய்திருக்கின்றார். இந்த திருமணத்தின் போது மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா இருவரிற்கும் 30 வருடங்கள் வித்தியாசமாகும்.

மேலும் பாலு மகேந்திரா இறக்கும் நேரத்தில் நடிகை மௌனிகாவிடம் இரண்டு சத்தியம் கேட்டிருக்கின்றார். அதில் முதல் சத்தியம் நான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குநர்களின் படங்களில் நீ நடிக்க வேண்டும் என மௌனிகாவிடம் கூறியிருக்கின்றார்.


அதேபோன்று இன்னொரு சத்தியம் என்னவெனில் மறுமணம் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். ஆனால் மௌனிகாவோ இதற்கு மட்டும் தன்னால் சத்தியம் செய்ய முடியாது அவரிடம் உறுதியாக கூறி விட்டாராம். 

இவ்வாறாக மௌனிகா பாலு மகேந்திராவின் இறுதிக் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஓப்பனாக கூறி இருக்கின்றார்,

Advertisement

Advertisement