• Jul 24 2025

கோலாகலமாக நடந்த நடிகை நமீதா மகன்களின் பெயர் சூட்டும் விழா- வைரலாகும் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

நமிதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.


பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கு பெற்றுள்ளார்.


மேலும் நமிதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். 


மேலும் 2000 களின் நடுப்பகுதியில், அவர் தமிழ் படங்களில் கவர்ச்சியான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். அதுமட்டுமல்லாமல் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர். இப்போது அவரது மார்க்கெட் சரிந்துவிட சினிமா பக்கம் அவ்வளவாக வருவதில்லை.


மேலும் இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர் என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. பின் நடிகை நமீதா உடல் எடையை குறைத்து சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.


மேலும் இவருக்கு சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது நடிகை நமீதா தனது மகன்களுக்கு சூரத்தில் அதாவது அவரது சொந்த ஊரில் பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு தனது மகன்களின் பெயர்களையும் அறிவித்துள்ளார்.


Advertisement

Advertisement