• Jul 24 2025

கர்ப்பமாக இருக்கும் போது நடிகை நமீதா செய்த செயல்...வைரல் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நமீதா. 17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, 2002ஆம் ஆண்டு 'சொந்தம்' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . 

அதன்பிறகு ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இதையடுத்து தமிழில் 2004ஆம் ஆண்டு வெளியான 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா.

அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.

கடந்த,2017 ஆம் ஆண்டு நடிகரான 'வீரேந்திர சௌத்ரி' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. கிருஷ்ணா ஆதித்யா' மற்றும் 'கியான் ராஜ்' ஆகிய பெயர்களை தனது இரட்டை குழந்தைகளுக்கு நமீதா வைத்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை நமீதா தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக வயிற்றின் மேல் கை வைத்தவாறு உள்ள அச்சை எடுத்து அதில் வர்ணம் பூசி சிலை போல் தனது வீட்டில் செய்து வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement