• Jul 25 2025

நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளாரா...? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஆதி. இவர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராகவும் இருந்து வருகின்றார். அதிலும் குறிப்பாக இவர் சமீபகாலமாக அதிகளவில் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். 


அந்தவகையில் அண்மையில் கூட லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'தி வாரியர்' என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஆதி. அதுமட்டுமல்லாது இவர் தற்போது தமிழைவிட தெலுங்கில் தான் அதிகளவிலான படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவ்வாறாக படங்களில் பிஸியாக இருந்து வந்த ஆதிக்கு கடந்த மே மாதம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதாவது இவர் நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். 


அதாவது 'மரகத நாணயம்' மற்றும் 'யாகாவராயினும் நாகாக்க' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தபோது இவர்கள் இருவரிடையேயும் காதல் மலர்ந்தது. அந்த காதல் வெற்றிபெற்று தற்போது இருவரும் ரியல் ஜோடிகள் ஆகி சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.


மேலும் ஆதியும், நிக்கி கல்ராணியும் திருமணத்திற்கு பின் பாரிஸுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள ஈபிள் டவர் முன் இருவரும் ஜோடியாக எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. 


இந்நிலையில் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி குறித்து தற்போது ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில் விரைவில் ஆதி - நிக்கி கல்ராணி தம்பதி பெற்றோர் ஆக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. 


இருப்பினும் இதுகுறித்து ஆதி-நிக்கி கல்ராணி தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை. அதுமட்டுமல்லாது நிக்கி கல்ராணி சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது எனப் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement