• Jul 26 2025

நடிகை நித்யா மேனன் வீட்டில் நடந்த சோகம் - இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

1998ம் ஆண்டு ஆங்கிலத்தில் Hanuman என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்.

அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு 2006ம் ஆண்டு கன்னடத்தில் 7'o Clock என்ற படத்தில் நடித்தார்.

பின் மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மொழி ஒரு பிரச்சனை இல்லை, அதனை நன்றாக கற்றுக்கொண்டு என்னால் நடிக்க முடியும் என காட்டி வருகிறார் நித்யா மேனன்.

2022ம் ஆண்டு கடைசியாக தமிழில் நித்யா மேனன் தனுஷுடன் இணைந்து நடித்த திரைப்படம் வெளியாகி இருந்தது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது நித்யா மேனன் ஒரு புதிய படம் நடித்து வருகிறார்.

இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நித்யா மேனன் ஒரு சோகமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதாவது அவரது பாட்டி உயிரிழந்துள்ளாராம், அதனை வருத்தத்துடன் அவர் பதிவிட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement