• Jul 25 2025

நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்..வேலைக்கார நபரை அதிரடியாக கைது செய்த போலிஸார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் பார்வதி நாயர். இவர் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார். அதாவது சந்திரபோஸ்  தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது தனது புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வேலைக்கார வாலிபர் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement