• Jul 25 2025

ஆபாச கருத்துப் பதிவிட்டு கேலி செய்கிறார்கள்... 43 வயதான நடிகை பவித்ரா போலீஸில் பரபரப்பு புகார்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பவித்ரா லோகேஷ். இவர் கன்னடத்தில் மட்டுமல்லாது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் 'கவுரவம்', 'அயோக்யா', 'க/பெ.ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இவரும் தெலுங்கு நடிகர் நரேஷும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. தெலுங்கில் பிரபலமாக இருந்தாலும் நரேஷ், தமிழில் 'நெஞ்சத்தை அள்ளித்தா', 'பொருத்தம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

அந்தவகையில் நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்தபோது, நரேஷின் 3ஆவது மனைவியாகிய ரம்யா, அவர்களை அடிக்கப் பாய்ந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


அதுமட்டுமல்லாது இவருக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இதற்கு முன்பும் தகவல் பரவியது. மேலும் 60 வயதாகும் நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். பவித்ராவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. இவரும் திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தான் பவித்ராவும் நரேசும் ஜோடியாக பல இடங்களுக்கு சுற்றி வருகிறார்கள். அதேபோல் தான் சமீபத்தில் மைசூரில் பவித்ரா லோகேஷும் நரேசும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருப்பதை அறிந்து நரேசின் 3-ஆவது மனைவி ரம்யா அங்கு வந்து சண்டை போட்டு பவித்ராவை செருப்பால் அடிக்க பாய்ந்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து தான் பவித்ரா லோகேஷ் ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதாவது ''சில சமூக ஊடகங்களில் என்னை கேலி செய்து அவதூறு தகவல்கள் வருகின்றன. எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு ஆபாச கருத்துகள் பதிவிடுகின்றனர். மார்பிங் செய்த புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அப்புகாரில் குறிப்பிட்டு உள்ளார் பவித்ரா.

Advertisement

Advertisement