• Jul 25 2025

தொடர்ந்து பல படங்கள் தோல்வி... கதை தேர்வு குறித்து பேசிய நடிகை பூஜா ஹெக்டே

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  அறிமுகமாகி, பின் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

மேலும் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை.

கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த Ala Vaikunthapurramuloo திரைப்படம் தான் இவருக்கு கிடைத்த கடைசி வெற்றி திரைப்படமாகும்.

இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த Most Eligible Bachelor, ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சர்யா, சர்கஸ், மேலும் சமீபத்தில் வெளிவந்த கிசி கி பாய், கிசி கா ஜான் என தொடர்ந்து 6 தோல்வி படங்கள் பூஜா நடிப்பில் வெளிவந்துள்ளது.

இதனால் பூஜா ஹெக்டே கதை தேர்வு தரவாக இருக்கிறதா என கேள்வி எழுந்தது.

இவ்வாறுஇருக்கையில், இதற்க்கு பதிலளித்துள்ள நடிகை பூஜா 'நான் ஒன்றும் சினிமா குடும்ப பின்னணியில் இருந்து நடிக்க வரவில்லை. அத்தோடு என்னை தேடி ஒரு நாளைக்கு 20 கதைகள் வருவதற்கு. நான் சாதாரணமான குடும்பத்தில் இருந்து தான் நடிக்க வந்துருகிறேன். அதனால் என்ன தேடி வரும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்' என கூறியுள்ளார். 


Advertisement

Advertisement