• Jul 25 2025

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளை இவர் தானாம்... தீயாய் பரவும் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. அதுமட்டுமல்லாது இவர் தமிழிலும் 'முகமூடி, பீஸ்ட்' போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் இதையடுத்து தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மீண்டும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


அந்தவகையில் பூஜா ஹெக்டே இந்தியில் ‘கிசா கா பாய் கிசி கி ஜான்’ என்ற படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படமானது தமிழில் அஜித் - சிவா கூட்டணியில் வெளியாகி ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான் கானுக்கும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பின்னர் அது வதந்தி எனத் தெரியவந்தது.


இந்த நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஆனால் இது தொடர்பாக பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்புக்களும் வெளியாகவில்லை. இருப்பினும் இவரது திருமணம் குறித்த தகவல் ஆனது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement