• Jul 25 2025

பாரம்பரிய முறைப்படி வளைகாப்பினைக் கொண்டாடிய நடிகை பூர்ணா- வித்தியாசமான முறையாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பூர்ணா.தொடர்ந்து அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 


தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களிலும் பூர்ணா நடித்துள்ளார்.தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.

தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.கேரளாவை சேர்ந்த இவர்  சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். 


சில நாட்களுக்கு முன் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் கணவர் வீட்டில் நடந்த தமது வளைகாப்பு புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூர்ணா பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண்ணூர் மாவட்டத்தின் பாரம்பரிய முறைப்படி நடந்த வளைகாப்பு புகைப்படங்களை பூர்ணா வெளியிட்டுள்ளார். வேட்டி கட்டி கண்ணூர் இஸ்லாமிய மரபுப்படி இந்த வளைகாப்பு பெண் வீட்டில் நடந்துள்ளது. வளைகாப்பில் குடும்பத்துடன் இருக்கும் வீடியோ & புகைப்படங்களை பூர்ணா வெளியிட்டுள்ளார்.



Advertisement

Advertisement