• Jul 26 2025

நடிகை பிரியா பவானி ஷங்ரா இது-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானார் நடிகை பிரியா பவானி சங்கர். இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றார். தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் .

இந்நிலையில் ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், 10 தல, போன்ற படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகின்றன. திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டார். அவை விரைவில் வெளியாகவுள்ளது

இப்போது கூட பிரியா அருண் விஜய்யுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

இதுவரை பிரியா நடிப்பில் 10 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகை பிரியா பவானி ஷங்கரின் பள்ளி பருவ புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் அவருடைய புகைப்படம் இதோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement