• Jul 26 2025

தியேட்டரில் கதறி அழுத நடிகை பிரியா வாரியார்- சமாதானப்படுத்திய பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


மலையாள சினிமாவில் வெளியாகிய ஒரு அடார் லவ் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பிரியா வாரியார்.இவர் இப்படத்தில் பண்ணிய கண்ணடிக்கும் சீன் மூலம் உலக அளவில் பிரபல்யமானார்

ஆனாலும் அப்படம் தியேட்டர்களில் வெளியாகி பெரிய பிளாப் ஆனது.அதனால் அதற்கடுத்து பிரியா வாரியருக்கு எந்த படமும் பெரிதாக கிடைக்கவில்லை, வாய்ப்பு கிடைத்து நடித்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.


இந்நிலையில் தற்போது பிரியா வாரியர் ஹீரோயினாக நடித்து இருக்கும் 4 இயர்ஸ் என்ற படத்தின் ஸ்பெஷல் ஷோ போடப்பட்டு இருக்கிறது.

என்ஜினியரிங் கல்லூரி காதல் ஜோடி பற்றிய கதை இது என்பதால் தான் 4 years என படத்திற்கு பெயர் வைத்து இருக்கின்றனர். இந்த படத்தை திரையில் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது பிரியா வாரியர் கதறி கதறிஅழுதிருக்கிறார்.


 இது ஆனந்த கண்ணீர் என்பதும் முக்கியமாகும். மேலும் அந்த படத்தின் ஹீரோ அவரது கண்ணீரை துடைத்துவிட்டு சமாதானப்படுத்தி இருக்கிறார் இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement