• Jul 25 2025

மாலத்தீவில் மாடர்ன் உடையில் அசத்தும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி..! லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பிரியதர்ஷினி பாக்யராஜ் இயக்கிய தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, இதயக்கோவில், உயிரே உனக்காக ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து, பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விழுதுகள் சீரியலில் நடித்துள்ளார்.

ஆங்கராக மட்டுமில்லாமல் சன் டிவியில் வானிலை செய்தி வாசிப்பாளராகவும் இருந்த பிரியதர்ஷினி கலைஞர் தொலைக்காட்சியில் படவரிசை பத்து என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார்.

: சில ஆண்டுகள் சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்த பிரியதர்ஷினி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற கேரக்டரில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 

ஓய்வு நேரங்களில் தனது கணவருடன் சுற்றுலா செல்வதில் ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி தற்போது மாலத்தீவில் ட்ரெண்டி உடையில் இருக்கும் புகைப்படங்களை தந்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.


Advertisement

Advertisement