• Jul 25 2025

படப்பிடிப்பில் ஓவராகத் திமிர் காட்டும் நடிகை ப்ரியங்கா மோகன்- விரைவில் திருமணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என இரண்டு படங்களிலும் நாகியாக தோன்றியிருந்தவர் ப்ரியங்கா மோகன்.

இவர் டாக்டர் படத்தில் வெகுளியான பெண்ணாக துருத்துருவென பேசி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதை அடுத்து டான் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து நாயகனை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வசீகரித்து இருந்தார் பிரியங்கா மோகன். 


100 கோடி கிளப்பில் இணைந்த டான் படத்தின் நாயகியானதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கேப்டன் மில்லர் படத்தில் தனுசுக்கு நாயகியாக நடித்து வருகிறார். 1980 களின் பின்னணியில் எடுக்கப்பட்டும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதன் டீசர் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

அத்தோடு சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற காமெடி சார்ந்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் இவர் கமிட்டாகி உள்ளார்.தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர், அவ்வப்போது போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவ்வாறு படவாய்ப்புக்கள் குவிந்து வருவதால் படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவதோடு திமிராகவும் இருந்து வருகின்றாராம்.இதனால் இவர் விரைவில் சினிமாவை விட்டு விலகி திருமண பந்தத்தில் இணைந்து செட்டிராவதற்கும் வாய்ப்பு இருக்கெனவும் தகவல் வெளியாகியுள்ளது.





Advertisement

Advertisement