• Jul 24 2025

பிரமாண்டமாக நடந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்தம்- ரகசியமாக வெளியாகிய போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை ராதா. தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சிவாஜி என அந்த காலத்து டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார். சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்த ராதா கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.


நடிகை ராதாவுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளனர். இதில் ராதாவின் மூத்த மகளான கார்த்திக நாயர், கேவி ஆனந்த் இயக்கிய கோ படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து பாராதிராஜா இயக்கிய அன்னக்கொடி, எஸ்.பி.ஜனனாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என மொத்தமே 3 படங்களில் மட்டும் நடித்தார். பின்னர் படவாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு விலகிவிட்டார்.


இந்நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண வரவேற்பு நடந்து முடிந்திருக்கிறது.வருங்கால கணவர் உடன் கார்த்திகா நாயர் இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி இருக்கிறது.  


Advertisement

Advertisement