• Jul 26 2025

தந்தைக்கு சப்ரைஸ் கொடுத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் -வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தனது 13வது வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா கிருஷ்ணா.இவர் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர்.

முப்பது ஆண்டுகளாக திரைத்துறையை நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் எப்போதும் யாராலும் மறக்க முடியாத ஒன்று.

மற்றும் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் மிரட்டலான இவருடைய நடிப்பு உலகளவில் பேசப்படும் நடிகையாக மாறினார் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய திரைப்படங்கள் நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில் நேற்று சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது தந்தைக்கு கேக் வெட்டி உள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் தந்தை மீது எவ்வளவு பாசம் உள்ளவர் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement