• Sep 13 2025

'கண்ணை பெரிசாக்கி கத்துவாங்க ;நான் பயந்திடுவன்' - நடிகை ரம்யா கிருஷ்னண் -மகனின் ஜாலி பேட்டி...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தனது தனித்துவமான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் படையப்பா திரைப்படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரையில் மக்களால் பெரிதும் பேசப்படுகின்ற ஒன்றாகவே காணப்படுகிறது.

படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பன்முகம் கொண்டவராக விளங்கினார்.

தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் தனது மகனுடன் பேட்டி கொடுத்துள்ளார் .அதில் அம்மா.மகன் இருவரும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருந்தனர்.இதனை kpy பாலா நடத்தியிருந்தார்.

அந்த பேட்டியில்; எந்தளவிற்கு உங்க அம்மாவை பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது ,,'' அம்மாவ ரொம்ப பிடிக்கும்,வீட்டில ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க ,அதோட என்னை நிறைய கிஸ் பண்ணுவாங்க அந்த விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ,கண்ண உருட்டி பெரிசாக்கி வெருட்டி கத்துவாங்க அது எனக்கு பிடிக்காது. ஏன் கத்துறனான்னு சொல்லு என ரம்யா கேட்க...மார்க் குறைவா எடுத்தா தான் என கூறி சிரித்தார்.

இவ்வாறாக பல சுவாரஸ்ய தகவல்களை அந்த பேட்டியில் ஜாலியாக பேசியிருந்தனர்.


Advertisement

Advertisement