• Jul 26 2025

'குழந்தைகளுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றார்'.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாவ்வி. இவர் 'பாந்தினி' என்ற சீரியலின் மூலமும் 'பெட்டர் ஹாஃப்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருந்து வரும் சாவ்வி தொடர்ந்து தன் புகைப்படங்கள், தன் குழந்தைகளின் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் சமீபத்தில் இவர் தன் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தமிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து சாவ்வி தன் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொள்கிறார், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார் என்றெல்லாம் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

சாவ்விக்கு அஸீரா, அர்ஹம் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், முன்னதாக தன் மீது வைக்கப்பட்ட இத்தகைய விமர்சனங்களுக்கு தற்போது பதிலளித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் "ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படி நேசிக்கிறாள் என்பதில் சிலருக்கு இப்படியெல்லாம் ஆட்சேபனை இருக்கக்கூடும் என்று என்னால் சற்றும் நினைத்தும்கூட பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு ஆதரவாக எனக்கு வந்த கருத்துகள் மனிதநேயம் மற்றும் அன்புக்கு ஆதரவானவை. 


என் இரு குழந்தைகளையும் அவர்களின் உதட்டில் முத்தமிடும் சில படங்களை மீண்டும் பகிர்கிறேன், ஏனென்றால் அவர்கள் மீதான எனது காதலுக்கு எல்லைகளை எவ்வாறு அமைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அன்பைக் காட்டுவதில் வெட்கப்படாமல் இருக்க நான் அவர்களுக்குக் கற்பிக்கிறேன். அவர்கள் அதை திரும்ப எனக்கு அளிக்கிறார்கள். 

விரும்புபவர்களை காயப்படுத்துவதற்கு மட்டுமே நீங்கள் வெட்கப்படுங்கள் என நான் சொல்லிக் கொடுத்துள்ளேன். மேலும் இதுகுறித்து உங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" எனவும் குறிப்பிட்டு தன் குழந்தைகளை உதட்டில் முத்தமிடும் புகைப்படங்களை மீண்டும் பதிவிட்டுள்ளார் சாவ்வி.

இதனையடுத்து சாவ்விக்கு ஆதராவகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement