• Jul 24 2025

பெண் குழந்தையை தத்தெடுத்த நடிகை ரோஜா- யாரும் அறிந்திடாத தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா.இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் இவரது முதல் படம் செம்பருத்தி ஆகும் .

மேலும் இப் படம் செம கிட் ஆனதால் அடுத்தடுத்து நிறைய படவாய்ப்புகள் இவரை வந்து சேர்ந்தது இவர் செம்பருத்தி திரைப்பட ஆர்கே செல்வமணி என்பவரைத் திருமணம் செய்துள்ளதோடு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

படங்களில் பிஸியாக நடித்திருந்தாலும் ரோஜா அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆந்திர மாநிலத்தில் முழுநேர அரசியல் வாதியாக கலக்கி வருகிறார்.இவர்  தனது தொகுதி மக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அப்படி அவரை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த ஒரு சிறுமியை தத்தெடுத்த ரோஜா படிப்பு செலவை ஏற்றுள்ளார்.

எனினும் தற்போது அவர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து திருப்பதி பத்மாவதி மகளிர் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.


முதலாமாண்டு மருத்துவ படிப்பு படித்துவரும் அவர் வருங்காலத்தில் இலவசமாக மருத்துவ சிகிச்சை செய்வதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement