• Jul 24 2025

முக்கிய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா- புகைப்படத்துடன் வைரலாகும் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இவர் விஜய்தேவர் கொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டிருந்தார்.


மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 


இந்நிலையில் தற்போது சமந்தா மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதாக அவர் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement