• Jul 25 2025

நடிகை சமந்தாவின் ''சாகுந்தலம்'' திரைப்படம் ரீலிஸ் எப்போ - வெளியானது அதிகாரப்பூர்வமான தகவல்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா. அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாகுந்தலம். இப்படத்தின் டிரைலர் ஜனவரி 9 ஆம் தேதி வெளியானது.

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.

மிகவும் புகழ்பெற்ற சாகுந்தலை புராணக் கதையில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா - துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாபாத்திரத்தை அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா ஏற்றுள்ளார். தில்ராஜூ தயாரித்துள்ளார். 

கடந்தாண்டு நவம்பரில் வெளியாக வேண்டிய படம் பலமுறை தள்ளிப் போனது. தற்போது, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் 3D -யில் வெளியாக உள்ளதாக அதிரகாரப்பூரவமான தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement