• Jul 24 2025

விஜய் சேதுபதியால் சூட்டிங்கை விட்டு தெறித்து ஓடிய நடிகை ஸ்ருதி..எல்லாம் அந்த விஷயத்துக்கு தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின்  மக்கள் செல்வன் என்ற பெயரோடு புகழப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் மதிப்பு வைத்திருக்கக்கூடியவர் தான். மேலும் அப்படி தன்னுடைய ரசிகர்கள் தன்னை பார்க்க வரும் போது செல்ஃபி புகைப்படங்களை எடுப்பதோடு அவர்களை கட்டித்தழுவி முத்தம் கொடுக்கவும் செய்வார்.

எனினும் அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான லாபம் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.


அப்படம் உருவான போது கொரானா காலக்கட்டம் என்பதால் பல கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடைபெற்றது. எனினும் அந்தசமயத்தில் விஜய் சேதுபதி தன் ரசிகர்களை சந்தித்து முத்தம் கொடுத்து இடைவெளியை கடைப்பிடிக்காமல் நடந்து கொண்டார் என்பதால் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹாசன் ஷூட்டிங்கை விட்டே ஓடிவிட்டாராம்.


அத்தோடு அவரின் செயல்கள் சற்று ஸ்ருதி ஹாசனுக்கு அதிர்ச்சியை கொடுத்ததால் ஸ்ருதி படப்பிடிப்பை விட்டு வெளியேறியிருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் நடக்கவில்லை என்றும் ஸ்ருதி ஹாசன் அப்படி ஒரு சம்பவம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


லாபம் படத்தின் ஷூட்டிங்கில் ரசிகர்கள் பார்வையிட கூட அனுமதியில்லாத சமயத்தில் எப்படி விஜய் சேதுபதி அவர்களுக்கு முத்தம் கொடுக்கமுடியும்.அத்தோடு  தன் நலனைவிட ரசிகர்கள் மீது அக்கரை கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. அப்போது அவர் ரசிகர்களை சந்திக்கவே இல்லை என்று அவரது தரப்பினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement