• Jul 25 2025

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒரே நடிகை சுஷ்மிதா சென்...அடடே இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சுஷ்மிதா சென் முன்பு, மாடல் ரோஹ்மன் ஷால் உடன் டேட்டிங் செய்து வந்தார். பின்னர் 2021-ல் அவர்கள் பிரிந்தனர்.

சுஷ்மிதா சென் மிகவும் திறமையான பாலிவுட் நடிகைகளில் ஒருவர். அவர் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

மேலும் அந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் சுஷ்மிதா சென். அத்தோடு இவர் லலித் மோடி நான்காவது இடத்தில் இருப்பதைப் பார்க்கும்போது, அவர்களின் காதல் விவகாரம் அவர்களை கூகுளில் அதிகம் தேட வைத்திருப்பது புரிகிறது.

சுஷ்மிதா மற்றும் லலித் இருவரும் இன்ஸ்டாகிராமில் தங்களின் படங்களை பகிர்ந்து, தங்கள் ரிலேஷன்ஷிப்பை அதிகாரப்பூர்வமாக்கிய செய்தி இணையத்தில் வைரலானது.அத்தோடு  பலரும் சுஷ்மிதாவும், லலித் மோடியும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றெல்லாம் பதிவிட்டு வந்தனர்.

பலரோ எப்படி இந்திய அரசை ஏமாற்றிவிட்டு ஒடிபோன லலித்தோடு சுஷ்மிதா இப்படி செய்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கோபத்தோடு ட்வீட் பதிவிட்டனர். இதற்கிடையே தாங்கள் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் டேட்டிங் மட்டுமே செய்து வருவதாகவும் இருவரும் அறிவித்தனர்.

அத்தோடு சுஷ்மிதா சென் முன்பு, மாடல் ரோஹ்மன் ஷால் உடன் டேட்டிங் செய்து வந்தார்.இதன் பின்னர் 2021-ல் அவர்கள் பிரிந்தனர்.

இதற்கிடையில், வேலையைப் பொறுத்தவரை, 'தாலி' படத்தில் திருநங்கை மற்றும் சமூக ஆர்வலர் கௌரி சாவந்தின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுஷ்மிதா. எனினும் இது தவிர, ராம் மத்வானியின் 'ஆர்யா 3' படமும் அவரது கைவசம் உள்ளது.


Advertisement

Advertisement